87. அருள்மிகு தர்மபுரீஸ்வரர் கோயில்
இறைவன் தர்மபுரீஸ்வரர்
இறைவி விமலநாயகி
தீர்த்தம் கௌரி தீர்த்தம்
தல விருட்சம் நெல்லி மரம்
பதிகம் திருநாவுக்கரசர்
தல இருப்பிடம் பழையாறை வடதளி, தமிழ்நாடு
வழிகாட்டி கும்பகோணத்திலிருந்து ஆவூர் செல்லும் பாதையில் சுமார் 8 கி.மீ. தொலைவில் முழையூர் என்னும் ஊருக்கு அருகில் பழையாறை வடதளி உள்ளது. பட்டீஸ்வரத்திலிருந்து சுமார் 2 கி.மீ.
தலச்சிறப்பு Pazhayarai Gopuramபழையாறை, வடதளி இரண்டும் அருகருகே உள்ள வெவ்வேறு தலங்கள். பழையாறை சோழர்களின் முக்கிய நகரங்களுள் ஒன்றாக இருந்தது. பிற்கால சோழர்களின் தலைநகராகவும் இருந்துள்ளது. இந்த ஊரைச் சுற்றி படைவீடுகள் இருந்தன. பழையாறை வடதளி கோயில் அப்பரின் பதிகம் பெற்ற தலம். பழையாறை சோமேஸ்வரர் கோயிலும், ஆறை மேற்றளி சபாநாயகி கோயிலும் வைப்புத் தலங்களாகும்.

திருநாவுக்கரசர் இத்தலத்திற்கு வந்தபோது, இக்கோயிலை அடைத்து மூலவரையும் தாழி ஒன்றால் மூடி சமணர்கள் தங்கள் மடத்தைக் கட்டியிருப்பதைக் கண்டார். சிவபெருமானை வழிபடாமல் திரும்புவதில்லை என்று உறுதிபூண்டு உண்ணாவிரதம் மேற்கொண்டார். அன்று இரவு இறைவன் அரசன் கனவில் தோன்றி சமணர்களை செயலைத் தெரிவிக்க, அரசனும் மறுநாள் அங்கு வந்து சமணர்களின் மடத்தை அகற்றி, தாழி¬யை நீக்கி, வடதளி நாதர் வெளிப்பட்டார். அப்பரும் இறைவனை வணங்கி பதிகம் பாடினார்.

மூலவர் தர்மபுரீஸ்வரர் லிங்க வடிவில் தரிசனம் தருகின்றார். 16 பட்டை லிங்கம். அம்பிகை விமல நாயகி என்னும் திருநாமத்துடன் அருள்பாலிக்கின்றாள்.

Pazhayarai Praharamகோச்செங்கட்சோழன் கட்டிய மாடக்கோயில்களுள் ஒன்று. சிதிலமடைந்திருந்த இக்கோயில் தற்போது (2017) கோயில் மீண்டும் கட்டப்பட்டு புதுப்பொலிவுடன் திகழ்கிறது.

Pazhayarai Amarneethi Nayanarஅறுபத்து மூவர்களுள் ஒருவரான அமர்நீதி நாயனார் வழிபட்டு முக்தியடைந்த தலம். மதுரையின் அரசியாக விளங்கிய மங்கையர்க்கரசியாரின் அவதாரத் தலம் இது. அவரது தந்தையார் மணிமுடிச் சோழன் ஆட்சி புரிந்த இடம்.

இராஜராஜசோழனும், அவனது சகோதரி குந்தவை நாச்சியாரும் வாழ்ந்த தலம்.

அருணகிரிநாதர் இத்தலத்து முருகனை தமது திருப்புகழால் போற்றிப் பரவியுள்ளார்.

திருநாவுக்கரசர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 8 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரையும் நடை திறந்திருக்கும்.

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com